நாடாளுமன்றத்தில் திடீரென ராஜினாமாவை அறிவித்த திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒவ்வொரு தலைவரும் விலகி வருகின்றனர். தற்போது அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தினேஷ் திரிவேதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி நாடாளுமன்ற உரையில் பேசுகையில், மாநிலத்திற்குள் நடக்கும் வன்முறை காரணமாக, தான் பதற்றமடைந்துள்ளதாகவும். இதன் காரணமாக தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகதனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகருக்கும், துணை குடியரசுத் தலைவருக்கும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா ராஜினாமா செய்த தினேஷை பாஜகவுக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.