மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜாகவிடம் இருந்து அசன்சோல் தொகுதியை கைப்பற்றுகிறது திரிணாமூல் காங்கிரஸ்

bypollelections trinamoolleadsinWB asansolelections2022
By Swetha Subash Apr 16, 2022 10:33 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலு,ம் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் பாஜாகவிடம் இருந்து அந்த தொகுதியை கைப்பற்றுகிறது திரிணாமூல் காங்கிரஸ்.

மேலும், பிகாரில் ஆர்.ஜே.டியும் சத்தீஸ்கரின் கைராகர், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகிக்கிறது.