திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி செய்த சிலுமிசம்..வைரலாகும் காணொளி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி பெண் எம்.எல். ஏ வின் கண்ணதை கிள்ளிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது. மேற்குவங்க சட்டசபைக்கு 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி கல்யாண் பானர்ஜி என்பவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் எம்எல்ஏவின் கன்னத்தை பிடித்து கொஞ்சி தனது அன்பை பகிர்ந்து கொள்கிறார்.
மேலும், இந்த காணொளி குறித்து லோகெட் சாட்டர்ஜி வெளியிட்ட பதிவில், ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிக்கிறது என்பதை பாருங்கள்?.
பேரவை தேர்தலில் சீட் கிடைக்காத பாங்குரா தொகுதி பெண் எம்எல்ஏவை எம்பி கல்யாண் பானர்ஜி என்ன செய்கிறார் பாருங்கள்?’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த காணொளி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சமந்தப்பட்ட எம்.எல். ஏ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.