யாருக்கு வாக்களித்தாலும் தாமரையில் பதிவாகும் வாக்கு: புகார் கொடுக்கும் திரிணமூல் காங்கிரஸ்

bjp vote congress trinamool
By Jon Mar 27, 2021 10:58 AM GMT
Report

மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டமாக இன்று 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் தலா 29 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேர், காங்கிரஸ் சார்பில் 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 191 பேர் களத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் முதல்கட்டத் தேர்தலில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜவின் தாமரைச் சின்னத்தில் பதிவாகும் வகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏதோ பெரிய அளவில் முறைகேடு நடப்பதால் உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லயில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று நண்பகலில் சந்தித்து புகார் அளிக்கவுள்ளனர்.