மிதுன ராசியில் இணையும் 3 கிரகங்கள் - இந்த 4 ராசிகளுக்கு பண மழை!
திரிகிரகி யோகத்தால் 4 ராசிகள் பலன்பெறவுள்ளது.
மிதுன ராசியில் மூன்று கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் ஆகியவை இணைகின்றன. இந்த இணைவு சக்தி வாய்ந்த திரிகிரகி யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஆகஸ்ட் 20, 2025 வரை மூன்று நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திரிகிரகி யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
கடனாக கொடுத்த பணம் திருப்பி கிடைக்க வாய்ப்புள்ளது. நிலவையில் இருந்த பணப் பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும்.
மிதுனம்
புதிய வேலைகள் மற்றும் பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், அரசு டெண்டர்கள், பல ஒப்பந்தங்களில் இருந்து லாபம் பெறலாம். சமூகத்தில் நற்பெயர் மற்றும் மரியாதை உயரும்.
கன்னி
தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உறுதியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். சட்டப் போராட்டங்கள் நடத்தி வருபவர்களுக்கு இந்த காலத்தில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
மற்றவரிடம் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிக உறவுகள் உருவாகும். தலைமைத்துவம் மேம்படும். தொழிலில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படும். வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். மனரீதியாக அமைதி நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.