பகலில் நகை பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் - சாலை விபத்தில் உயிரிழப்பு!
நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
நகை பறிப்பு
பொள்ளாச்சியில் மையப் பகுதியில் அமைந்துள்ள கடைவீதியில் நேற்று முன்தினம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.
அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் நிலைதடுமாறி அந்த பெண் கீழே விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவர்களைப் பிடிக்க வருவதற்குள் இரண்டு திருடர்களும் தப்பிச் சென்றனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
விபத்தில் உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்த பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மேம்பாலம் அருகே பைக்கில் வந்தவர்கள் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் அறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது இறந்த இரண்டு பேரும் கடை வீதியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்த்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் "இவர்கள் இரண்டு பேர் மீதும் பழனி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கு சம்பந்தமாக கைதாகி சில நாட்களாக செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்தனர் என்றும் இருவரும் வயதுடையவர்கள் என்று தெரிவித்தனர்.