தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டம்.., எது தெரியுமா ?
தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய சுற்றுலாத்துறை
இந்தியாவின் சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
ஆன்மிகம், மருத்துவம், கலாசாரம், சூழலியல் என பல்வேறு வகையான சுற்றுலாக்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
உலக அளவில் சுற்றுலா பொருளாதாரத்தில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2வது இடத்திலும் உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் தமிழ்நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டமாக திருச்சி முதலிடத்தில் உள்ளது.
திருச்சி முதலிடம்
திருச்சிக்கு மாதத்திற்கு சுமார் 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பல ரயில்கள் திருச்சி வழியாக செல்கின்றன. மேலும், சர்வதேச விமான நிலையமும் திருச்சியில் உள்ளது.
இதுதவிர, என்.ஐ.டி., மத்திய சட்டப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.எம். உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், பெல், துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்களும் திருச்சியில் அமைந்துள்ளன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோவில், புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர்வலி தர்கா உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களும் திருச்சியில் உள்ளன.
மேலும், முக்கொம்பு மேலணை, புளியஞ்சோலை, பச்சமலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா, ரயில் அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளன.
ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் எளிதாக திருச்சிக்கு வந்து செல்ல முடிகிறது.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan