தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சி?
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சி அறிவிக்கப்படலாம் என பேசப்படுகிறது.
அமைச்சர்கள் மனு
திருச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின் போது, இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான கனிமொழியிடம் வழங்கப்பட்டது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிர்வாக சுமையை கருத்தில் கொண்டு இந்த மனு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைநகரமாக திருச்சி
மேலும் தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி அமைந்திருப்பதாலும், நிர்வாக ரீதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் எளிதில் அணுககூடியதாக இருக்கும் என்பதாலும் திருச்சியை தெரிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
எனவே தேர்தலுக்கு முன்பாகவே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் அல்லது தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இது இடம்பெறும் என பேசப்படுகிறது.
ஏற்கனவே எம்ஜிஆர் காலத்தில் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
