திருச்சி சூர்யா சிவா “மோட்டர் வாய்” வச்சிக்கிட்டு பேசக்கூடாது - அலிசா அப்துல்லா ஆவேசம்
நெறியாளர் முக்தாரிடம் உள்ள வீடியோவை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம் என பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
வைரலான வீடியோ
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவாவை நெறியாளர் முக்தார் பேட்டி ஒன்றை எடுத்திருந்தார்.
அந்த பேட்டியில் அலிஷா அப்துல்லா குறித்து நெறியாளர் முக்தார் பல கேள்விகளை திருச்சி சூர்யாவிடம் எழுப்பி இருந்தனர். அதற்கு திருச்சி சூர்யா சிவா பல அந்தரங்கம் குறித்த பதில்களை தெரிவித்து இருந்தார்.
இந்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜகவின் தலைமை அலுவலகம் ஆன கமலாலயத்தில் அலிஷா அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அலிசா அப்துல்லா சவால்
அப்போது பேசிய அவர், தன்னை திருச்சி சூர்யா சிவா போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அலுவலகத்தில் சந்தித்த திருச்சி சூர்யா, அவருடைய அப்பா குறித்தும் பதவி குறித்தும் பேசினார்.
காதில் ரத்தம் வருகிற அளவுக்கு பேசும் போது நான் நீங்க வந்த விஷயத்தை மட்டும் பேசுங்கள் என்று கூறினேன். நீங்க விளையாட்டு பிரிவில் இருக்க கூடாது.
நீங்க மகளிர் பிரிவுக்கு போங்க...இல்லை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு வாங்க...ஆனா இந்த பிரிவில் இருக்காதீங்க. அமர் பிரசாத் ரெட்டி பற்றியும், மூத்த நிர்வாகிகள் பற்றியும் கேவலமாக பேசியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அலிசா அப்துல்லா, சூர்யா சிவா தன்னை சேலை கட்டுவது சரியில்லை என்றும், ஜிம்க்கு சென்றால் சார்ட்ஸ் போட கூடாது, மூத்த நிர்வாகிகள் தப்பா நினைப்பார்கள்.
என்னை உருவக் கேலி செய்தும், உடல் பாகங்கள் குறித்தும் தவறாக பேசியதாக தெரிவித்தார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலைக்கு தெரியப்படுத்தினேன். அதற்கு அவர் நான் அவரை அனுப்பவில்லை அதை நம்பாதீர்கள் என்று தெரிவித்தார்.
திருச்சி சூர்யா தொடர்ந்து எனக்கு கால் செய்தார். பின்னர் அமர் பிரசாத் அண்ணாவிடம் இதைப்பற்றி தெரிவித்தேன். என்னுடைய சோசியல் மீடியா மற்றும் தொடர்பு எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.
சிறுபான்மை பெண்கள் பிஜேபியில் இருக்க கூடாது என்று டார்க்கெட் செய்கின்றனர். செய்தியாளர் முக்தார் இப்படி ஒரு கேவலமான பேட்டியை எடுத்துள்ளார்.
என்னோட அலுவலகத்திற்கு வந்து மோட்டர் வாய் என்ன வெல்லாம் பேசினார் என்பது பற்றிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
என் பின்னால் பாஜக மற்றும் அண்ணாமலை இருக்கிறார் எனக்கு ரொம்ப ஆதரவாக இருக்கிறார். இது போன்ற நிகழ்வுகளை பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும்.
பெண்கள் பற்றி தப்பா பேசாதீங்க.. என கேட்டுக் கொண்டார்.
முக்தாரிடன் என்னுடைய வீடியோ இருந்தால் வெளியிட சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: சுக்கிர புத்திரர்களான ரிஷப ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது? Manithan