திருச்சி சிவா மகன் சூர்யா கைது
சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
திமுகவிலிருந்து விலகல்
கடந்த மாதம் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சில அதிருப்தி காரணமாக திமுகவிலிருந்து விலகினார். இதனையடுத்து, அவர் பாஜகவில் இணைந்து கொண்டார்.
அவர் இணைந்தபோது சூர்யாவிற்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று பாஜக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, சொன்னமாதிரியே தற்போது பாஜகவின் ஓபிசி பிரிவில் மாநில பொதுச் செயலாளராக சூர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருச்சி சிவா மகன் சூர்யா கைது
இந்நிலையில், பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சூர்யாவை கைது செய்துள்ளனர்.