பாஜகவில் இணையும் திமுகவின் முக்கிய புள்ளியின் மகன் - காரணம் என்ன?
தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா; காதல் திருமணம் செய்த இவர், மனைவி, குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
அவர் பாஜகவில் இணையப் போவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவாவின் மகன் சூர்யா 15 ஆண்டுகளுக்கும் மேல் தி.மு.க.,வில் உள்ளார்.
அவருக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. கனிமொழியின் ஆதரவாளர் என முத்திரை குத்தி, அவர் ஓரங்கட்டப்படுவதாக, அவருக்கு உறுத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியில் சூர்யா பாஜகவில் இணையப் போவது உறுதியாகி உள்ளது.நாளை மறுநாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை வருகிறார்.
அப்போது அவரை சந்தித்து பாஜகவில் அவர் இணையப் போவதாக கூறப்படுகிறது.திராவிட கொள்கைப் பிடிப்புடன் ராஜ்யசபாவில் குரல் கொடுத்து வரும் சிவாவின் மகன் எதிர் கொள்கை கொண்ட பா.ஜ.,வில் இணையப்போவதாக வெளியாகும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.