காவல்நிலையத்தில் திமுகவினர் வன்முறை : ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதா சட்டம் - கொந்தளித்த இபிஎஸ்
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகின்றார் என இபிஎஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.
திமுக மோதல்
திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடந்தது . இந்த தாக்குதலுக்கு காரணம் அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் தான்காரணம் என்று காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நீதிமன்ற காவல் நிலையத்தில் அமைச்சர் நேரு, திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்களிடையே மோதலில் ஈடுபட்டனர்.
பெண்காவல் காயம்
நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது நாற்காலியை எடுத்து வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டிய சிவா ஆதரவாளர்கள் கைது செய்து காவல்நிலையத்தில் இருந்த நிலையில் அவர்கள் மீது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் காவல் நிலையத்தில் நடந்த மோதலை தடுக்க வந்த சாந்தி என்ற பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இருதரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல்நிலையத்தில் திமுகவின் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதற்கு எதிர்கட்சியினர் பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் :
ரவுடிகள் கட்டுப்பாடு
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. 1/2 pic.twitter.com/Xb7u8d6zaT
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 15, 2023
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளனர்