அதை செய்றதை தவிர வேற வழியேயில்லை; ரவுடி பேபியால்.. திருச்சி சாதனா கண்ணீர்

Karur
By Sumathi May 13, 2025 05:30 AM GMT
Report

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சாதனா புகாரளித்துள்ளார்.

ரவுடி பேபியின் செயல்

கரூர், நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர். தற்போது தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

trichy sadhana - rowdy baby surya

இந்நிலையில், தன்னைக் குறித்தும், தனது குழந்தைகள், கணவர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி பேசுவதாகவும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவதூறு பரப்பும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சாதனா, " சிக்கந்தர் என்ற சிக்கந்தர் ஷாவும், ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி அசிங்கமான ஆபாச பேச்சால் என் குழந்தைகளை பேசி வருகின்றனர்.

இங்க இருந்த தெருவை காணோம்; தீக்குளிப்பேன் - ஜிபி முத்து பரபரப்பு புகார்

இங்க இருந்த தெருவை காணோம்; தீக்குளிப்பேன் - ஜிபி முத்து பரபரப்பு புகார்

திருச்சி சாதனா புகார்

11ஆம் வகுப்பு படிக்கும் எனது குழந்தையை கூட மிகவும் அசிங்கமாக பேசி இருக்கிறார்கள். காதால் கேட்க முடியாத அளவுக்கு கொச்சையாக பேசி வருகிறார்கள் சிக்கந்தரும் சூர்யாவும். தொடர்ந்து மீடியாக்கள் முன்னால் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

அதை செய்றதை தவிர வேற வழியேயில்லை; ரவுடி பேபியால்.. திருச்சி சாதனா கண்ணீர் | Trichy Sadhana Complaint Against Rowdy Baby Surya

தொடர்ந்து மன உளைச்சலால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் தான் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். இது தொடர்பாக எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையே எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் மிரட்டுகிறார்கள்.

எனவே அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை" என தெரிவித்துள்ளார்.