திருச்சி ரயில்வே நுழைவாயிலில் இந்தியில் பெயர்! எழுந்த கண்டனங்கள்
திருச்சி ரயில்வே நுழைவாயிலிக்கு கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்
பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 4, 2026
இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!
'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில்… pic.twitter.com/rJdLSyyQsc
தமிழிசை சௌந்தரராஜன்
தன்னுடைய X தள பக்கத்தில், சில அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை வலியுறுத்தியுள்ளேன்.
சு வெங்கடேசன் எம்பி
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே .
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 4, 2026
“ கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “ இந்தித் திணிப்பு”… pic.twitter.com/LEqdGsDcPe
தமிழச்சி தங்கபாண்டியன்
கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பது புறவாசல் வழியாக இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சியாகும். தமிழர்களின் மொழிப்பற்று, உணர்வுகளை புறக்கணித்து இந்தியில் பெயரிடுவது கடும் கண்டத்துக்குரியது. இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் பெயரிட தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.