ஆதார் கார்டில் 122 வயது : 4 ஆண்டுகளாக பெண் மனஉளைச்சல்

By Irumporai Feb 27, 2023 11:14 AM GMT
Report

ஆதார் இன்று இந்திய குடிமகனின் அடிப்படையான அடையாள அட்டையாக உள்ளது, அதே சமயம் ஆதாரில் பிழை திருத்தம் இருந்தால் அது கடும் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் திருச்சியில் ஒரு பெண்ணுக்கு ஆதார் அட்டையில் 100 வயதை தாண்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறை தீர்க்கும் முகாம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது, இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைத்து விதமான பிரச்சினைகள் குறித்தும் புகார் மனு அளித்து வருகின்றது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தாயனூரை சேர்ந்த கவிதா என்பவர் புகார் மனுஒன்றை அளித்துள்ளார் , அந்த மனுவில் தனது வாக்களர் அடையாள அட்டையில் 3/5/1982 என எனது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் 122 வயது : 4 ஆண்டுகளாக பெண் மனஉளைச்சல் | Trichy News Woman Upset After Registering Age 122

ஆதாரில் 120 வயது

ஆனால் ஆதார் கார்டில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளது , இதனால் தனது வயது 100 தாண்டி காட்டுவதாகவும் இதற்காக 4 ஆண்டுகள் அலைவதாக கூறும் கவிதா நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், குழந்தைகள் படிப்பிற்காகவும் மற்ற தேவைக்காகவும் வங்கிகளில் லோன் எடுக்க வேண்டும்.

கடன் வாங்க வங்கிகள் பலவற்றுக்கு சென்றாலும் யாரும் எங்களுக்கு லோன் தர மறுக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த நான்கு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனவே இந்த மனுவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்