கஞ்சா வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - என்ன நடந்தது?
திருச்சியில் கஞ்சா வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரை சேர்ந்த அருண், பல நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், அப்பகுதியில் அருண் தலையில் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன், அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அவரது நண்பர்களான பிரேம் ஜாகீர், முபாரக் ஆகியோருடன் அருண் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் யார் அவரை வெட்டியது என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.