திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா : அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

By Irumporai Apr 06, 2023 11:16 AM GMT
Report

திருச்சியில் ரூ 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

 அமைச்சர் அறிவிப்பு

திருச்சியில் ரூ.600 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா : அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு | Trichy Ministers Announcement In Assembly

டைடல் பூங்கா

அந்தவகையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கள் தென்னரசு, திருச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த ரூ.600 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று நிறுவப்படும்.

10 லட்சம் சதுர அடியில் 10,000 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் பஞ்சப்பூரில் உலகதரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளதாகவும் காரைக்குடி, ராசிபுரத்தில் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் டைசல் உயிரின் முகவரி என்ற பெயரில் சென்னை, கோவையில் ரூ.10 கோடியில் டைசல் புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.