உக்ரைன் நாட்டு போரை நிறுத்த பள்ளி மாணவிகள் அமைதி புறாவாக அமர்ந்து வலியுறுத்தல்

trichyyukawomenunion trichystudentspeacesign methodisttrichy
By Swetha Subash Mar 07, 2022 09:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்பட்டு வரும் போரை நிறுத்த வலியுறுத்தி திருச்சி பள்ளி மாணவிகள் அமைதி புறாவாக மாறினர்.

உலக பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பெண்கள் தினத்தை முன்னிட்டும், உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்குள் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்தியும்,

திருச்சி யுகா பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி மெத்தடிஸ்ட் பள்ளி சார்பில் பள்ளி மாணவிகள் "அமைதி புறா" வடிவில் அமர்ந்திருந்தனர்.

உக்ரைன் நாட்டு போரை நிறுத்த பள்ளி மாணவிகள் அமைதி புறாவாக அமர்ந்து வலியுறுத்தல் | Trichy Methodist School Students Perform Peace

இந்த புறாவிற்கு நடுவில் இந்திய தேசிய கொடியை மாணவிகள் கையில் பிடித்துக்கொண்டு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

உக்ரைனில் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்தியும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் சமாதான சின்னமாக திகழும் அமைதி புறாக்களை வானில் பறக்க விட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.