மனைவியை விவாகரத்து செய்யும் திருச்சி DIG வருண்குமார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
திருச்சி டிஐஜி வருண்குமார், தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிஐஜி வருண்குமார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் நிர்வாகியான காளியம்மாள் குறித்துப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த ஆடியோவை திருச்சி எஸ்.பி வருண்குமார் தான் வெளியிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதன் காரணமாக திருச்சி டிஐஜி வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.இதனால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் டிஐஜி வருண்குமாரையும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனையடுத்து தனது குடும்பத்தின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி திருச்சி டிஐஜி வருண் குமார் எக்ஸ் தளப்பக்கத்தில் இருந்து வெளியேறினார்.இதனைத் தொடர்ந்தும் அவரை நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
விவாகரத்து?
இந்த நிலையில் மீண்டும் திருச்சி டிஐஜி வருண் குமார், தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது.இதற்கு மறுப்பு திருச்சி டிஐஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் தனது அவர் தனது வாட்ஸ் ஆப்பில் status-ல் பதிவிட்டுள்ளதாவது,’’
திரள் நிதி திருடர் எந்த அளவிற்குச் சென்றுவிட்டார் என்று பாருங்கள் மக்களே..பார்க்கவே பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி என்றும்,நான் உணை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன் ''என்ற பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார்.