இரண்டாவது தலைநகரமாகுமா திருச்சி? சட்டசபையில் கோரிக்கை!
திருச்சியினை தமிழகத்தின் இரண்டாவது தலை நகரமாக அறிவிக்க வேண்டுமென சட்டப் பேரவை எம்.எல் ஏ இருதய ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டாவது நாளன இன்று நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர்.
இந்த நிலையில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேசும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வைக் காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.