‘’எஸ்ஐ பூமிநாதன் படுகொலை '’ கொலை வழக்கில் 4 பேர் கைதானது எப்படி? வெளியானது பரபரப்பு தகவல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று இரவுரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.
அதில் இருவர்கள் சிறுவர்கள் என்பது தான் அதிர்ச்சிக்கர்மான தகவல் தஞ்சாவூர், புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆடு திருடி சென்றவர்களை துரத்திச் சென்று பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே மடக்கிப் பிடித்துள்ளார். உடனே நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூகுள் மேப்பாக ஷேர் செய்துள்ளார். இதனிடையே அதில் சிறுவன் ஒருவனின் தாயாரிடம், பூமிநாதன் 23 நிமிடங்கள் பேசியிருக்கிறார். சிறுவனின் விவரங்களையும் கேட்டறிந்துள்ளார். தற்போது இந்த உரையாடலை வைத்து தான் நால்வரையும் கைது செய்துள்ளனர் போலீஸார்.
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாகவே ஆடுகளை மர்ம கும்பல் திருடி வந்துள்ளது.
ஆகவே இதை தடுக்க திட்டமிட்டு, நேற்று முன்தின இரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயன்றுள்ளார். துணைக்கு போலீஸ் இல்லாமல் தனியாகச் சென்றுள்ளார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி அந்த திருட்டு கும்பல் கீரனூர் அருகே அதிகாலையில் பூமிநாதனை வெட்டி படுகொலை செய்தது.
இந்த நிலையில் கொலை செய்த நால்வரையும் கைது செய்தது எப்படி எனபது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், விசாரணை நடத்தப்பட்ட 6 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீஸார் அவர்களில் யாருடைய செல்போன் சிக்னல் கடைசியாக பூமிநாதன் ரோந்து செய்த இடத்திற்கும் அவர் கொல்லப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் இடத்திற்கும் இடையே இருந்தது என்பதை ஆய்வு செய்தனர்
அதன்படி 4 பேரது செல்போன்கள் மேற்கூறிய இடத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இதை வைத்துதான் கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையில் கொலை நடந்த நேரத்தில் செல்போன் பயன்பாடுகளும் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.
இந்த 4 பேரில் 10 வயது சிறுவனும் இருந்தது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் 4 பேரும் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆட்டு திருட்டை பல ஆண்டுகளாக செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.