மறக்குமா நெஞ்சம்: 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோர தாண்டவம் - சுனாமி நினைவு தினம்!
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக கடற்கரைகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி
2004 ஆம் ஆண்டு இதே நாள் டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த மறுநாள். இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி உருவானது.
சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை மிக மோசமாக தாக்கியது. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
கண்ணீர் அஞ்சலி
இதில் அதிகமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழ்ந்தனர். மேலும், பல்வேறு கட்டிடங்களும் சேதமாகின். அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்த மக்களின்
நினைவு கூறும் விதமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.