இறந்தவர்களை சூப் வைத்து சாப்பிடும் மக்கள் - விநோத சம்பவம்

United States of America
By Sumathi Mar 08, 2023 10:34 AM GMT
Report

இறந்தவர்களை பழங்குடியினர் சூப் வைத்து குடிக்கும் சடங்கு பின்பற்றப்படுகிறது.

பழங்குடியினர் 

பிரேசில், வெனிசுலா போன்ற இடங்களில் யனோமாமி பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களை உண்கிறார்கள். இது அறிவியல் ரீதியாக எண்டோகானிபலிசம் (Endocannibalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களை சாப்பிடுவது என்பது பொருள்.

இறந்தவர்களை சூப் வைத்து சாப்பிடும் மக்கள் - விநோத சம்பவம் | Tribe America Makes Banana Soup Ashes Of Dead

இவர்கள் மரணத்திற்கு பிறகு ஒருவரது ஆன்மா சாந்தியடை வேண்டும் என்றால், அவர்களது உடல் எரிக்கப்பட்டு அதனை உயிருடன் இருக்கும் இறந்தவர்களின் உறவினர்கள் சாப்பிடவேண்டும் என நம்புகின்றனர். அதன்படி, இறந்தவர்களின் முகங்களில் சிறிது மண்ணை தேய்த்து பிணங்களை எரிக்கின்றனர்.

எண்டோகானிபலிசம்

இந்த சடங்கின் முதற்கட்டமாக இறந்தவர்களின் உறவினர்கள் அழுது, பாடல்கள் பாடி துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதன் பிறகு இரண்டாவது கட்டமாக எரிந்த உடல்களின் மிச்சத்தை சேகரித்து, அதனை வாழைப்பழத்துடன் சேர்த்து, சூப் போல சமைத்து உட்கொள்கின்றனர்.

இறந்தவர்களை சூப் வைத்து சாப்பிடும் மக்கள் - விநோத சம்பவம் | Tribe America Makes Banana Soup Ashes Of Dead

இறந்தவர்களின் மரணம் இயற்கையானதாக இருந்தால் அனைவருமே இந்த சூப்பை சாப்பிடுகின்றனர். மாறாக இறந்தவர்கள் அவர்களின் ‘எதிரிகளால் கொலை செய்யப்பட்டால்’ பெண்கள் மட்டும் தான் இந்த பிணங்களை சாப்பிடவேண்டும்.

மேலும், சடங்கு நிறைவடைந்த பிறகு அதே இரவில், இறந்தவர்களின் உறவினர்கள் எதிரிகளின் எல்லைக்குள் சென்று அவர்களது பொருட்களை இவர்கள் கைப்பற்றி வந்து பகையை தீர்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது.