குடியரசு தின விழாவில் VVIP-யாக பங்கேற்கும் தமிழக பழங்குடி தம்பதி - யார் இவர்கள்..?

India's Republic Day Tamil nadu Coimbatore India
By Jiyath Jan 26, 2024 05:39 AM GMT
Report

தங்கள் நில உரிமைக்காக அகிம்சை வழியில் போராடி வென்ற பழங்குடியின தம்பதி, டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் விவிஐபியாக பங்கேற்கின்றனர்.

பழங்குடி தம்பதி 

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்த தம்பதி ஜெயபால்-ராஜலட்சுமி. இவர்கள் காடர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

குடியரசு தின விழாவில் VVIP-யாக பங்கேற்கும் தமிழக பழங்குடி தம்பதி - யார் இவர்கள்..? | Tribal Couple Participating Republic Day

இதில் பழங்குடியினர் உரிமைக்காக மக்களை ஒன்று திரட்டி அறவழியில் போராடி நில உரிமை பெற்றுத் தந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு பக்க பலமாக கணவர் ஜெயபால் இருந்து வருகிறார்.

மேலும் தனது கணவர் ஜெயபால் ஒத்துழைப்புடன், தனது கிராமத்தை இந்தியாவின் மிகச் சிறந்த முன்மாதிரி கிராமமாகவும் மாற்றிக் காட்டியுள்ளார்.

வி.வி.ஐ.பி

இந்நிலையில் இந்த தம்பதியின் செயலை பாராட்டும்விதமாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிகமிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் கலந்து கொள்ள தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டனர்.

குடியரசு தின விழாவில் VVIP-யாக பங்கேற்கும் தமிழக பழங்குடி தம்பதி - யார் இவர்கள்..? | Tribal Couple Participating Republic Day

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்திலிருந்து, குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்த தம்பதியருக்கு அழைப்பு வந்துள்ளது.

இவர்கள், குடியரசு தலைவர் தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன்பின், குடியரசு தலைவர் வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர்.