டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ட்ரெண்ட் போல்ட் - குவியும் வாழ்த்து
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற 2வது டெஸ்ட் போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லாதம் 252 ரன்களும், கான்வே 109 ரன்களும் விளாச 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து அசத்தியுள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்தின் 4-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை போல்ட் பெற்றார்.
இதனை 75வது டெஸ்டில் போல்ட் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.