அதிக விலைக்கு உள்ளாடைகள் விற்பனை - ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ்க்கு ரூ.2,10,000 இழப்பீடு - ஷாக்கான மக்கள்...!
அதிக விலைக்கு உள்ளாடைகளை விற்பனை செய்ததால் ரூ.2,10,000 இழப்பீடு வழங்க ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்க்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம்
இந்தியாவில் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறை, ஸ்மார்ட் போன்கள், ஆடைகள், இரும்பு பொருட்கள், சிம் கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது.
ரூ.2,10,000 இழப்பீடு
இந்நிலையில், MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் ரூ.2,10,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ரூ.260க்கு விற்கப்பட வேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், தமிழ்நாடு மாநில நல நிதிக்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.10 ஆயிரத்தையும் வழங்க உத்தரவிட்டுள்ளது.