அம்பானி மேட்ச் பிக்ஸிங் செய்தாரா? : மும்பை - ஹைதராபாத் போட்டியில் வெடித்த சர்ச்சை

ipl2021 MIvSRH fixing
By Petchi Avudaiappan Oct 08, 2021 09:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக ட்விட்டரில் இணையவாசிகள் கருத்து பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 55வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெ்ற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 235 ரன்களை குவித்தது.

அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் எடுத்து, ஹைதராபாத் அணியை 65 ரன்களில் வீழ்த்தினால் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. அதை பேட்டிங்கில் செய்து காட்டியதால் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் சரமாரியாக மும்பை அணி நிர்வாகம் மீது குற்றம் சாட்ட தொடங்கினர்.

குறிப்பாக அந்த அணி பேட் செய்த போது 'மேட்ச் பிக்ஸிங்' என்ற வார்த்தை இணையத்தில் வைரலானது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வீரர்கள் கேட்ச் டிராப் செய்தது, ஃபீல்டிங் சொதப்பியது, ஆடும் லெவன் வீரர்கள் தேர்வு தொடங்கி என அனைத்தும் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் மும்பை அணி இந்த தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

You may like this