ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ShameonYouSamantha .. காரணம் என்ன?

viral ShameonYouSamantha family man 2
By Irumporai Jun 02, 2021 04:01 PM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2 தொடரில் நடித்துள்ளார்.

வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் famailyman 2  படம் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் சமந்தா இன்னும் எந்த பதிலும் தெரிவிக்காதது ஏன் என  ட்விட்டர்வாசிகள்கேட்டு வருகின்றனர்.

தற்போது வரை சமந்தா இந்த சம்பவத்திற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை ஆகவே ட்விட்டரில் #ShameonYouSamantha என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.