பயமா முதல்வரே.. மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

dmk kamalhassan makkalneedhimaiam tngovernment
By Petchi Avudaiappan Aug 26, 2021 04:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர் இதுவரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அந்த நிகழ்வு மறுக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் தேர்ந்தெடுத்த காட்சிகள் மட்டும் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் தங்கள் தொகுதியின் மக்கள் பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்களா என்பது பொதுமக்களுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது.

சட்டசபை நேரலை நிகழ்வை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை ட்விட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் #பயமா_முதல்வரே என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இணையவாசிகள் பலரும் சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப ஏன் தயங்குகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.