‘‘அப்பா வாழ்ந்த இடத்தில் பணப் புதையல் இருக்கு" - வீரப்பன் மகள் விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி
ராஜா தயாரித்துஇயக்கி நடித்துள்ள, மாவீரன் பிள்ளை. இந்த படம் மூலமாக மறைந்த சந்தன வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, நடிகையாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை சொல்லி தருபவரக அவர் நடித்துள்ளார், இந்த படம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில்.

இது, ஜாதி சம்பந்தப்பட்ட படம் அல்ல என கூறிய அவர் கூத்து கலைஞர்கள், போலி காதல், மது விலக்கு, விவசாயம் உள்ளிட்ட பல சம்பவங்களை இப் படத்தில் கூறியுள்ளதாக கூறினார். மேலும், அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால், நிச்சயம் செய்வேன்.
இதற்காக, அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன் என கூறிய விஜயலட்சுமி தனது அப்பா புதைத்து வைத்த பணம், காட்டில் இருப்பதாகவும் ஆனால், தற்போது அது செல்லாது என கூறினார்.
அந்த பணம் இருக்குமிடம் அப்பாவுக்கும், அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும் என கூறினார்.