புதிய அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா

DMK
By Irumporai May 11, 2023 06:01 AM GMT
Report

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா.

டி.ஆர்.பி.ராஜா

மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா | Trb Raja Sworn In As New Minister

தமிழக அரசின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். 

ஆளுநர் வாழ்த்து

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  

இந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம். மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமனம்; தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு