பாஜகவிற்கு அதிகார போதை...மீண்டும் ஆட்சி வந்தால் மக்களின் நிலை..? அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

DMK BJP Lok Sabha Election 2024
By Karthick Apr 06, 2024 02:54 AM GMT
Report

தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்ததின் செயல்பாடு விமர்சனங்களை பெற்றுளளது.

ஏ.பி முருகானந்தம்

பாஜகவின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஏ.பி.முருகானந்தம். இவரை இன்று தேர்தல் பறக்கும் படையின் அதிகாரிகள் வாகன சோதனைக்கு உட்படுத்தினர்.

trb-raja-question-bjp-in-ap-muruganandham-issue

அப்போது அதிகாரிகளிடம் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் அவதூறாக நடந்து கொண்ட விதம் குறித்தான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. இது குறித்து அவர் மீது வழக்கும் பதிவிடப்பட்டுள்ளது.

அதிகார போதை

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு வருமாறு,

trb-raja-question-bjp-in-ap-muruganandham-issue

எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது...ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை !அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல ! அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை ! இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள் !