அந்தமாதிரி நேரங்களில் கணவரால் ரொம்ப கஷ்டமா இருக்கு - போட்டுடைத்த ஆஸி. வீரர் மனைவி!

Cricket Australia Cricket Team ICC World Cup 2023 Travis Head Sports
By Jiyath Dec 06, 2023 09:12 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸிக்கா தன் கணவர் குறித்து பேசியுள்ளார்.

டிராவிஸ் ஹெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

அந்தமாதிரி நேரங்களில் கணவரால் ரொம்ப கஷ்டமா இருக்கு - போட்டுடைத்த ஆஸி. வீரர் மனைவி! | Travis Head Wife Jessica About Their Life

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியை சேர்ந்த டிராவிஸ் ஹெட். இறுதிப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசியிருந்தார். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு பின் தன் கணவர் டிராவிஸ் ஹெட் குறித்து மனைவி ஜெஸிக்கா பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது "சில சமயம் அவர் இல்லாதது எனக்கு கடினமாக இருக்கும். ட்ராவிஸ் பிறந்தநாள் விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்களுக்கு வர மாட்டார். நானே தனியாக அங்கே செல்ல வேண்டி இருக்கும். இதுதான் கிரிக்கெட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வு.

IPL 2024: சிஎஸ்கே அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தான்.. - என்ன சொல்கிறார் அஷ்வின்?

IPL 2024: சிஎஸ்கே அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தான்.. - என்ன சொல்கிறார் அஷ்வின்?

மனைவி பேட்டி 

அதே சமயம் ட்ராவிஸ் மிகவும் ஆதரவு அளிக்கும் துணை. அவர் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தாலும் குடும்பத்திற்கு ஆதரவான விஷயங்களை செய்து விடுவார்" என்று ஜெஸிக்கா கூறினார்.

அந்தமாதிரி நேரங்களில் கணவரால் ரொம்ப கஷ்டமா இருக்கு - போட்டுடைத்த ஆஸி. வீரர் மனைவி! | Travis Head Wife Jessica About Their Life

மேலும், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து இந்திய அணியை வீழ்த்தியதால், சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஜெஸிக்காவை வசைப்பாடினர். அப்போது சில இந்திய ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து பேசிய ஜெஸிக்கா "99.99 சதவிகித மக்கள் மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள்.

ட்ரோல்களுக்காக நான் என் ஆற்றலை வீணாக்க விரும்பவில்லை. இந்தியா ஒரு அற்புதமான நாடு. அதன் கலாச்சாரம் மற்றும் மக்கள் மிகவும் அழகாகனது. மக்கள் நம்பமுடியாத அளவிற்கு குழந்தைகளை வரவேற்பதை நான் அங்கே கண்டேன். மக்கள் என் மகள் மில்லாவை வரவேற்றது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது அங்கே வித்தியாசமான வாழ்க்கை இருக்கிறது. அது எனக்குப் பிடித்திருந்தது" என தெரிவித்துள்ளார்.