கோவை டூ கேரளா... சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர் : காரணம் என்ன?

Viral Photos
By Irumporai Nov 07, 2022 05:00 AM GMT
Report

உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையிலிருந்து கேரளா வரை சைக்கிளிலேயே பயணம் செய்து மணப்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை டூ கேரளா

கோவை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் ,இவர் குஜாரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகின்றார்,இந்த நிலையில், இவருக்கும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்தை நேற்று கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நடத்த முடிவு செய்தனர்.

கோவை டூ கேரளா... சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர் : காரணம் என்ன? | Travel 150 Km Coimbatore To Kerla

இந்நிலையில் சிவசூர்யா தனது திருமணத்திற்கு கார், வேன் என வாகனத்தில் செல்லாமல் சைக்கிளிலில் செல்ல முடிவு செய்தார். கோவையில் இருந்து குருவாயூர் வரை சைக்கிளிலேயே செல்ல திட்டமிட்ட அவர், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

சைக்கிளில் சென்று திருமணம்

கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து சனிக்கிழமை மாலை சென்றடைந்தார்.இன்று காலை 10 மணிக்கு குருவாயூர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனா திருமணம் நடைபெற்றது.

தனது திருமணத்திற்கு சுற்றுச் சூழலை பாதுகாக்க சுமார் 150 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து வந்து திருமணம் செய்து கொண்ட இளைஞரின் செயல் இணையவாசிகளையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.