அதிர்ச்சி- ஒரே நாளில் இந்தியாவில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 685 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனா நாட்டில் உஹானில் உருவான கொரோனா நாடு முழுவதும் பரவி மனித உயிர்களை அழித்து வருகிறது.
கடந்த வருடம் மார்ச்சில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மத்திய அரசும், மாநில அரசும் முழு ஊரடங்கை பிறப்பித்தது. பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்ததும் மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகளை அறிவித்தது.
கிடந்த மூன்று மாதங்களாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கொரேனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் மீண்டும் பரவத் தொடங்கியது. இதனால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். கொரேனாவின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனாவின் வீரியம் இன்னும் குறைந்தபாடியில்லை.
நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 59,907 புதிய தொற்று பரவி உள்ளதாக கணக்கெடுப்பில் பதிவாகி இருக்கிறது. மேலும் சட்டீஸ்கரில் தொற்று எண்ணிக்கை முதன்முறையாக 10,000 தாண்டி உள்ளது. கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்திலும் 6,000 க்கும் மேற்பட்ட தொற்று எண்ணிக்கை பதிவாகி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 685 உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 1,29,28,574 கொரோனா தொற்று பதிவாகி இருக்கிறது. அவற்றில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 8,43,473 பேரும் மற்றும் 1,18,51,393 பேர் தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் 27,743 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புதிதாக 3986 தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.