அதிர்ச்சி - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

covid19 india people trauma
By Jon Mar 21, 2021 02:37 PM GMT
Report

உலகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் இறந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்தது. இதனையடுத்து, தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

அதிர்ச்சி - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு! | Trauma Corona Affects People India Last Hours

மேலும் 197 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகி இருக்கிறார்கள். நோய் தொற்றிலிருந்து 22,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.