கையை பிடிக்கத் தவறிய கணவன்.. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த மனைவி!

China Death
By Sumathi Apr 19, 2023 08:32 AM GMT
Report

சர்க்கஸ் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பல அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

சர்க்கஸ்

சீனா, சுஹோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் சுஹொங்க் மவ்மவ் மற்றும் சன் மவ்மவ் (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில், அந்நகரின் ஹொவ்ஹா என்ற கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது.

கையை பிடிக்கத் தவறிய கணவன்.. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த மனைவி! | Trapeze Artist Woman Felldown Death Shocking

இதனை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். தொடர்ந்து, அந்தரத்தில் தொங்கியபடி சுஹொங்க் மற்றும் அவரது மனைவி சன் ஆகியோர் சர்க்கஸ் செய்து கொண்டிருந்தனர். சுஹொங்க் தனது உடலில் கயிறை கட்டிய படியும் அவரது மனைவி சன் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சர்க்கஸ் செய்து கொண்டிருந்தனர்.

பெண் பலி 

அப்போது, சுஹொங்க் அந்தரத்தில் தொங்கியபடி தன் மனைவி சன்னை மேலே வீசினார். அதன்பின் தனது மனைவியின் கையை தன் காலால் பிடிக்க தவறிவிட்டார். இதனால், 32 அடி உயரத்தில் இருந்து சன் கீழே விழுந்தார்.

உடனே அவர் அருகிலுள்ள மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய அனுமதி, பாதுகாப்பு இன்றி சர்க்கஸ் நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.