தற்காலிகமாக தான் - வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற தொழிற்சங்கங்கள்..!
இரண்டாவது நாளாக நடைபெறும் வந்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த சூழலில் தான், தமிழக அரசு, தற்காலிக பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
வாபஸ்
பண்டிகை காலத்தில் நடத்தப்படும் போராட்டம் முறையற்றது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.
அதன்படி போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், வேலை நிறுத்தத்தை நிறுத்தி பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் தொழிலாளர்கள் சங்க தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.