வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீன மயமாக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும் - அமைச்சர் ராஜ கண்ணப்பன்.
Transport
Minister
Tamilnadu
By Thahir
பொதுமக்கள் எளிதில் சான்றிதழ் பெற ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீன மயமாக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும் என போக்குவரத்து துரை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேவையான தகுதிச் சான்றிதழ்,ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகளை நவீனமயமாக்கி பொதுமக்களுக்கு எளிதில்
கிடைக்க போக்குவரத்து துறையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும்,அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக
அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.