பேருந்து கட்டணம் உயருமா? அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தும் திட்டமில்லை என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அப்போது போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும் பேருந்து கட்டணம் உயர்வு பற்றியும் பேசியிருந்தார்.
இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழகத்தில் தற்போதைக்கு அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை.
நிதிசுமைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். போக்குவரத்து கழகம் புதிய பொழிவுடன் இனி செயல்படும்.
மேலும், பேருந்து நிறுத்தங்களில் அம்மா குடிநீர் மீண்டும் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வண்டலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.