மாணவர்களே உஷார்! படிக்கட்டில் தொங்கினால் நடவடிக்கை பாயும் - போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

Government of Tamil Nadu
By Thahir Feb 09, 2023 03:15 AM GMT
Report

பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் பாதுகாப்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுனரின் பேச்சைக் கேட்க வில்லையென்றால் காவல்துறையில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Transport department instruction for students

பேருந்துகளில் பயணம் செய்யும் போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்துத்துறை தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தால், அருகிலுள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது 100 எண்ணை அழைத்தோ புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.