கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இலவச இடம் - சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு

transgenderfreeseats 131tncolleges 3rdgendergetseducation
By Swetha Subash Mar 23, 2022 08:05 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

131 கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இலவச இடம் வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இயங்கிவரும் 131 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும்,

பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 131 கல்லூரிகளிலும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் திருநங்கையர்களுக்கு தலா ஒரு சீட் இலவசமாக வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இலவச இடம் - சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு | Transgenders To Get Free Seats In Colleges

மேலும் பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் தந்தவுடன், வரும் கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்கள் படித்து வரும் நிலையில்,

தற்போது 3-ம் பாலினத்தவர்களான திருநங்கையர்களுக்கும் இலவச இடம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி கற்க விரும்பும் திருநங்கையர்களின் வாழ்வு ஏற்றம் பெரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.