காப்புக்காட்டில் கிடந்த திருநங்கையின் சடலம்..தோழிகள் செய்த கொடூரம்- விசாரனையில் அதிர்ச்சி தகவல்!
காப்புக்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த திருநங்கையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கை யூஜின் வில்லியம் ஜோசப் என்கிற சுருதி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விருத்தாச்சலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
இதனால் நாள்தோறும் குடித்துவிட்டு, தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று, மஃபூல் ஷெரிப் என்ற தனது நண்பர் வீட்டிற்குத் திருநங்கை சுருதி சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் தங்கக் கேட்டுள்ளார்.அதற்கு ஷெரிப் மறுக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மக்புல் ஷெரிப் திருநங்கை சுருதி நண்பர்களுக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிரோஷா, மாயா, மரிக்கொழுந்து, சிவபெருமாள் ஆகிய 4 திருநங்கைகளை அழைத்துக் கொண்டு மக்புக் ஷெரிப் வீட்டிற்கு வந்துள்ளார்.
திருநங்கை
அப்போது சுருதிக்கும், சக திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், 4 பேரும் திருநங்கையான சுருதியை அடித்தே கொன்றுள்ளனர் . பின்னர் திருநங்கையின் உடலைப் போர்வை மூலமாகச் சுற்றி, சாலை ஓரத்திலிருந்த காப்புக் காட்டில் கொண்டு போய் தூக்கிப்போட்டுள்ளனர்.
பின்னர், ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலைக் குற்றவாளிகளுடன் சேர்த்துக் குற்றத்தை மூடி மறைக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.