திருநங்கைக்காக தெருவில் சண்டையிட்ட இளைஞர்கள் - பின்பு நடந்த விபரீதம்...!
திருநங்கைக்காக தெருவில் சண்டையிட்டு கொண்ட இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கைக்காக தெருவில் சண்டையிட்ட இளைஞர்கள்
டெல்லியைச் சேர்ந்தவர் அனில். இவர் சுனிதா என்ற திருநங்கையை காதலித்து வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சினையில் சுனிதா அனிலை விட்டு விலகி இருக்கிறார். வீட்டை விட்டு போகும்போது சுனிதா, அனிலின் ரூ. 40 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அனிலிடமிருந்து பிரிந்து சென்ற சுனிதா குட்டு என்ற இளைஞரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். குட்டுவும், இரு திருநங்கைகளிடம் சேர்ந்து தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

ஒருவர் பலி
இத்தகவல் அனிலுக்கு தெரியவந்தது. கோபமடைந்த அனில், சுனிதா வசித்து வந்த வீட்டுக்கு சென்று தனது 40 ஆயிரம் ரூபாயை திருப்பித் தருமாறு சண்டையிட்டுள்ளார். அப்போது, சுனிதா, குட்டு, அனில் ஆகிய 3 பேரும் தெருவில் சண்டை போட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த அனில், தான் வைத்திருந்த கத்தியால் சுனிதா, குட்டு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த சுனிதா, குட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், குட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுனிதாவுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் அனிலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.