திருநங்கைகள் இப்படியும் அம்மாவாக முடியும் - ஆச்சர்யமூட்டும் சம்பவம்!

Tamil nadu Coimbatore Transgender
By Vidhya Senthil Sep 26, 2024 10:30 AM GMT
Report

 கோயம்புத்தூரில் திருநங்கை செல்வி கனிகா தயாரிக்கும் ராவுத்தர் பிரியாணி பிரபலமானது.

திருநங்கை

திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் பார்வை தற்போது மாறி இருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் அவர்கள் முன்னேறி வருகின்றனர்.கல்வியின் உதவியால் சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றனர், சுயதொழில் செய்கின்றனர்.

transgender

வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.அந்த வரிசையில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்று திருநங்கைகள் வாழ்க்கையில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ஆதரவாகத் தமிழக அரசு உதவி செய்து வருகிறது.

முதல் திருநங்கை விஷம் குடித்து தற்கொலை; மனைவி சீரியஸ் - அதிர்ச்சி!

முதல் திருநங்கை விஷம் குடித்து தற்கொலை; மனைவி சீரியஸ் - அதிர்ச்சி!

அப்படி கோயம்புத்தூரைச் சேர்ந்த செல்வி கனிகா என்ற திருநங்கை டிசைன் போட்ட குர்தாவும், கட்டம்போட்ட லுங்கியும், வாரி முடிந்த கொண்டையுமாக தமிழ்நாடு முதல் கேரளா வரை உணவு தயாரித்து வருகிறார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கடந்த 15 ஆண்டுகளாகச் சமையல் செய்து வருகின்றேன்.

பிரியாணி

கோவையில் நாங்கள் தயாரிக்கும் ராவுத்தர் பிரியாணி பிரபலமானது. கோவையைக் காட்டிலும் கேரளாவில் அதிகமாக எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார். எங்கள் குழுவினர் 40 பேர் இணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரியாணி சமைத்து வருகிறார்.

biriyani

வீட்டில் டீ கூட போட தெரியாமல் இருந்தோம். ஆனால் தற்போது, பத்தாயிரம் பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்" என கண்களில் மகிழ்ச்சி பொங்கக் கூறினார். தொடர்ந்து பேசிய கனிகா,'' சமூகத்தில் அனைவருக்கும் உணவளிக்கும் தொழிலைச் செய்யும் எங்களை அனைவரும் அம்மா என்று அழைப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் சமையல் தொழில் இருப்பதால்தான் இந்த மதிப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்கிறார். இதன் மூலமாகக் கோவை மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலும் செல்வி அம்மாவின் பிரியாணிக்கு தனி மவுசு உள்ளது. இதனால் இல்ல விழாக்களுக்குச் செல்வி அம்மாவின் சமையல் ஆர்டரை மாதக்கணக்கில் காத்திருந்திருப்பதாகக் கூறினார்.