பாலியல் தொழிலில் ஏற்பட்ட போட்டி : திருநங்கைகள் இடையே நடந்த அதிர்ச்சி சம்பவம்
புனேவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த திருநங்கை ஒருவர் தனது வாடிக்கையாளர்களை சக திருநங்கை கவர்ந்துகொண்டதால் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் ஹாவேலி பகுதியைச் சேர்ந்த பண்டி மாருதி பந்தேவாட் என்கிற மகர்த்வாஜ், தேயூரில் வசிக்கும் காஜல் என்கிற கேசவ் உமாஜி சவான் என்ற திருநங்கைகள் இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பண்டி மாருதி பந்தேவாட் தனது வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டார் என்றும் இதனால் தனது வருமானம் குறைந்துவிட்டது என்றும் வருத்தத்தில் காஜல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது ஒருகட்டத்தில் வெறுப்பாக மாறி பண்டி மாருதி பந்தேவாட்டை காஜல் கொலை செய்துவிட்டதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக பண்டி மாருதி பந்தேவாட் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காஜலை போலீசார் கைது செய்தனர். மேலும் பண்டி மாருதி பந்தேவாட் அகமத்பூரின் லத்தூர் பகுதியை சேர்ந்தவர். அவர் திருநங்கை என்று யாருக்கும் தெரியாது. லத்தூரில் ஆணாகவும் தேயூரில் பெண்ணாகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.