மக்களவை தேர்தல்: பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை - எதற்காக தெரியுமா?

Narendra Modi Uttar Pradesh India Lok Sabha Election 2024
By Jiyath Apr 10, 2024 12:09 PM GMT
Report

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி என்பவர் போட்டியிடுகிறார். 

வாரணாசி தொகுதி 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி (46) என்ற திருநங்கை போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த இவர் அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக களமிறங்குகிறார்.

மக்களவை தேர்தல்: பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை - எதற்காக தெரியுமா? | Transgender Contest Against Pm Narendra Modi

மேலும், துறவியான இவர் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை பரப்பி வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி "பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடவில்லை.

உதவி செய்யவில்லை

திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களம் இறங்கியுள்ளேன். திருநங்கைகளுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.

மக்களவை தேர்தல்: பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை - எதற்காக தெரியுமா? | Transgender Contest Against Pm Narendra Modi

ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை. அகில இந்திய இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.