திருநங்கைகள் மசோதாவில் திருத்தம்: முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்ப்பு
மத்திய பாஜக அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள திருநங்கைகள் திருத்த சட்ட மசோதா திருநங்கைகளின் உரிமையை பறிக்கும்.
பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வந்த மசோதாவை திருநங்கைகளே எதிர்க்கும் போது அதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

திருநங்கைகளிடம் கருத்துகளை கேட்காமல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்படுவோரின் கருத்தை கேட்காமல் வலுக்கட்டாயமாக திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது.
திருநங்கைகளுடன் கலந்துரையாடி உண்மையான ஒருமித்த கருத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன் IBC Tamil
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan