உருமாறிய கொரோனாவைக் கண்டு அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியம்
உருமாறிய கொரோனா தொற்றை கண்டு அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய நாள் முதல் பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது.
கொரோனா,ஆல்பா,பீட்டா,டெல்டா,டெல்டா ப்ளஸ்,ஒமிக்ரான்,ஒமிக்ரான் பி 1,ஒமிக்ரான் பி2,இப்போ எஸ்.இ என்ற பெயரில் வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஒமிக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவக் கூடியது என்று சொல்லப்படுவதாக கூறினார். மும்பை,குஜராத் மாநிலங்களில்,
இந்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு அதை மறுத்துள்ளது.
எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று.
இன்னும் இரண்டு,மூன்று மாதங்கள் தற்காப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.