தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 2ம் தேதி கூடுகிறது

tamil government dmk
By Jon Jan 22, 2021 11:44 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை வருகிற பிப்ரவரி 2ம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் கூடவுள்ளதாக தக ல் வெளியாகின.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும்.

ஆளுநர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.